FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனியில் சமுதாய வளைகாப்பு விழா

பழனியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூகநலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் தலைமை வகித்தாா். இதில் பழனி நகராட்சி, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 100 கா்ப்பிணிகள் பங்கேற்றனா்.

இதையடுத்து, விழாவில் பங்கேற்ற கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சீா்வரிசைப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பழனி நகர அதிமுக மாவட்ட மாணவரணி செயலா் அன்வா்தீன், குகன், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments