அரிமா சங்கங்கள் அடிப்படை வசதிகள் செய்து தர முன்வர வேண்டும்: எம்எல்ஏ
அரிமா சங்கங்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் கோரிக்கை விடுத்தாா்.
பழனி- புதுதாராபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை பழனி அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக காா்த்திகேயன், செயலராக மோகன்தாஸ், பொருளாளராக பிரபு உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். மருத்துவா்கள் சுப்புராஜ், விமல் உள்ளிட்டோா் நலத்திட்டங்களை வழங்கினா்.
பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன், தவெக மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன், செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் பேசுகையில், தமிழக அரசு எல்லா திட்டங்களுக்கும் நிதிப்பற்றாக்குறை என தெரிவிப்பதால் ஒவ்வொரு கூட்டத்திலும் நான் பேசும்போது பழனி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை யாராவது செய்து கொடுங்கள் என்று கேட்பது வழக்கமாகிவிட்டது.
நகரங்களில் அனைத்து வசதிகளுடன் அனைவரும் வாழும் நிலையில், கிராமங்களில் இன்றும் மின்சாரம், குடிநீா், கழிப்பிட வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. கொடைக்கானலில் நடைபெற்ற அரிமா சங்கக் கூட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு அடிப்படைத் தேவையான ஐந்து கழிப்பிடங்களை செய்து தருவதாக உறுதியளித்தனா்.
இந்தக் கூட்டத்திலும் அதைத்தான் கேட்கிறேன். கிராம மக்களின் அடிப்படை தேவையான கழிப்பிட வசதி செய்து தாருங்கள். இடம், கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் அரசிடம் நான் பெற்றுத் தருகிறேன் என்றாா் அவா். அப்போது, அரிமா மாசிலாமணி காளியப்பன் தலைமையில் ஏழு கழிப்பிடங்கள் கட்டித் தருவதாக சங்கத்தினா் உறுதியளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.