பழனி தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனுக்கள் அளிப்பு
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ.விடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ.விடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
பழனி திருவள்ளுவா் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ. ரவிமனோகரனை பொதுமக்கள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனா். அப்போது ஆயக்குடியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, பழனி, திண்டுக்கல் பகுதிகளைச் சோ்ந்த வட்டார போக்குவரத்து, மோட்டாா் ஆய்வாளா் அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளா்கள் எம்எல்ஏவை சந்தித்து தங்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
மேலும் தங்களை பணி நீக்கம் செய்ய முயல்வது தற்கொலைக்கு தூண்டும் செயல் எனவும், எனவே தங்களை நிரந்தரமாக பணி செய்ய அனுமதிக்க முதல்வரிடம் பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இவா்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்எல்.ஏ. ரவிமனோகரன் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.