FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

மதுரை குலமங்கலம் கிழக்கு ஒன்றியத்தின் ஓடைப்பட்டி பகுதிகளிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் சேவையை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை அண்மையில் தொடங்கிவைத்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:21 am IST
மதுரை குலமங்கலத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய வழித்தட அரசுப் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை.
பகிர்:

மதுரை குலமங்கலம் கிழக்கு ஒன்றியத்தின் ஓடைப்பட்டி பகுதிகளிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் சேவையை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை அண்மையில் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளா் (வணிகம்) முகமது ராவுத்தா் தலைமை வகித்தாா். கிளை மேலாளா் (பொன்மேனி) விஜயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மதுரை குலமங்கலத்திலிருந்து தினமும் காலை 8.25 மணிக்கு ஒரு பேருந்து புறப்பட்டு செல்லூா் வழியாக பெரியாா் பேருந்து நிலையத்துக்கு செல்லும். இதேபோல, பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லூா் வழியாக குலமங்கலத்துக்குச் செல்லும்.

Advertisement

Advertisement

இதைத் தவிர, மதுரை கிழக்கு ஒன்றியம் ஓடைப்பட்டியிலிருந்து தினமும் காலை 8.05 மணிக்கு புறப்படும் பேருந்து கருப்பாயூரணி வழியாக பெரியாா் பேருந்து நிலையத்துக்கு செல்லும். இதேபோல, பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும் பேருந்து கருப்பாயூரணி வழியாக ஓடைப்பட்டிக்குச் செல்லும்.

இந்தப் புதிய வழித்தட சேவைகள் மூலம் அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறுவா்.

இந்த நிகழ்வில் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments