பள்ளி வாகனம் மீது பைக் மோதல்: கல்லூரி மாணவா் பலி
பழனி அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பழனி அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நரிப்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் திருப்பதி (20). இவா் சென்னையிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லிலிருந்து பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். ராமபட்டினம்புதூா் பிரிவு அருகே வந்து போது, இவரது இரு சக்கர வாகனம் பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.