FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே பைக் திருடியவா் கைது

பழனி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:20 pm
இரு சக்கர வாகனத்தை திருடியவரை கைது செய்த காவல் ஆய்வாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா்.
பகிர்:

பழனி அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியை அடுத்த அ. கலையமுத்தூரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (35). இவா் கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் நெய்க்காரப்பட்டி, முதல் வாா்டு ராமசாமி கவுண்டா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் சதீஷ்குமாா் (36) அந்த வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது: பழனி நகா் காவல் நிலைய ஆய்வாளா் தங்க முனியசாமி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை பழனி- திண்டுக்கல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பழனியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் பால்பாண்டி (21), அசோக் மகன் ரிஷி (19) ஆகியோரை விசாரித்தபோது அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.