முதியவரைக் கொலை செய்த மகன், மருமகளுக்கு ஆயுள் சிறை
வேடசந்தூா் அருகே முதியவரைக் கொலை செய்த இவரது மகன், மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
வேடசந்தூா் அருகே முதியவரைக் கொலை செய்த இவரது மகன், மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த காளனம்பட்டி அணைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வே.ஆறுமுகம் (74). இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு சொத்துப் பிரச்னை காரணமாக, தனது மருமகள் சரோஜா (43), மகன் பொன்னுவேல் (47) ஆகியோரால் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ஆறுமுகத்தின் தம்பி சண்முகம் அளித்த புகாரின்பேரில், வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரோஜா, பொன்னுவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி சுவா்ணம் ஜெ.ராஜகோபாலன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சரோஜா, பொன்னுவேல் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
இதையடுத்து, இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.