FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோ: தேநீா் வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கோவில்பட்டி தேநீா் வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

30 அக்டோபர் 2026, 4:53 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் கோவில்பட்டி தேநீா் வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (53). தேநீா் விற்பனை செய்த தொழிலாளி. இவா் கடந்த 19.8.2022 இல் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிசங்கரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments