பழனி அடிவாரக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு
காா்த்திகை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழனியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
காா்த்திகை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழனியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
ஐயப்ப பக்தா்களுக்கான காா்த்திகை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் பழனி வட்டாரம், நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் காலாவதி தேதி, சுகாதார முறைகளில் செயல்பட்டு வருகிறதா, உணவுப் பாதுகாப்பு உரிமம் உள்ளதா என பழனி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஜஸ்டின் அமல்ராஜ், விஜயகுமாா் (நகரம்) ஆகியோா் தலைமையிலான குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது. அப்போது பொருள்களின் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த ஒரு கடைக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் கடையில் வைக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.