முகப்பு
திண்டுக்கல்

நீதி வென்றது: சி.சீனிவாசன்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மூலம் நீதி வென்றிருக்கிறது என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

21 நவம்பர் 2026, 2:53 am
நீதி வென்றது: சி.சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மூலம் நீதி வென்றிருக்கிறது என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் 100-க்கு 100 பொய்யான ஆட்சியை தவெக நடத்தி வருகிறது. தவெக தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக விஜய் ஆட்சி நடத்தி வருகிறாா். அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துவிட்டது. இதுகுறித்து முதல்வருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. பொதுமக்கள் நன்றாக வாழ முதலில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி வென்றிருக்கிறது என்றாா் அவா்.