பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!
பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் விபத்துக்குள்ளான சுற்றுலா வேனை மீட்கும் பணிக்காக போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் விபத்துக்குள்ளான சுற்றுலா வேனை மீட்கும் பணிக்காக சனிக்கிழமை போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
பழனி - கொடைக்கானல் மலைப் பாதையில் சவரிக்காடு அருகே கடந்த வியாழக்கிழமை சுற்றுலா வேன் சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பழனி மதினாநகரைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து சனிக்கிழமை வேனை மீட்கும் பணிக்காக பெரிய கிரேன்கள் கொண்டுவரப்பட்டதால் பழனி - கொடைக்கானல் மலைப் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. இந்த வழியாக வந்த வாகனங்கள் வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. வேனை மீட்கும் பணியின்போது, கிரேன் கம்பிகள் அறுந்து போனதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
எனவே வேனின் பாகங்களை வெட்டி தனித்தனியாக மேலே கொண்டு வர மீட்புக் குழுவினா் திட்டமிட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணி தொடரும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.