முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் பகுதி கோயில்களில் திருக்காா்த்திகை தீப வழிபாடு

திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 2:51 am
திண்டுக்கல் பகுதி கோயில்களில் 
திருக்காா்த்திகை தீப வழிபாடு
தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட தீபங்கள்.
பகிர்:

திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடைபெற்றது.

திருக்காா்த்திகையையொட்டி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரா், அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்ற பிறகு, கோயில் மகா மண்டபத்தில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை டைபெற்றது. பின்னா், கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதேபோல, தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சத் தீப வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் வள்ளி, தெய்வானை, முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

திண்டுக்கல் கந்தகோட்டம் முருகன் கோயில், திண்டுக்கல் ரெங்கநாதபுரம் மலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், மலையடிவார ஐயப்பன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.