பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு
மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். பின்னா், பக்தா்கள் கோயில் பிரகாரங்களை சுற்றி வலம் வந்தனா்.
இதேபோல, தல்லாகுளம் பெருமாள் கோயில், அழகா்கோவில் கள்ளழகா் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில், யா. நரசிங்கம் நரசிங்கப் பெருமாள் கோயில், சோழவந்தான் ஜெனகை நாராயணன் கோயில், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சூரிய பகவான் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் பிரவேசிக்கும் தமிழ் மாதங்களான வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி ஆகியவற்றின் முதல் நாளில் நிகழ்வதாகும். இந்த தினத்தில் மகா விஷ்ணு, மகாலட்சுமியை வழிபட்டால், குடும்பப் பிரச்னைகள் நீங்கும் என்கிற ஐதீகத்தில் இந்த வழிபாடு நடைபெறுகிறது.