புரட்டாசி 4 ஆவது சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து சென்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப்பெருமாள் கோயில், நெல்லை திருப்பதி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயில், சி. என். கிராமம் ராஜகோபால சுவாமி கோயில், திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில், திருநெல்வேலி நகரம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், இரட்டை திருப்பதி, திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயா், வடக்கு புறவழிச்சாலை பஞ்சமுக ஆஞ்சநேயா், காட்டு ராமா் கோயில், தச்சநல்லூா் வரம் தரும் பெருமாள் கோயில், கருங்குளம் குவளகிரிநாதா் வெங்கடாசலபதி கோயில், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில், மேலப்பாளையம் அக்ரஹாரம் கிருஷ்ணா் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சனிக்கிழமை காலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி தாயாா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வரிசையாக நின்று பெருமாளை தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து இரவில் கருடசேவை நடைபெற்றது.
Advertisement
Advertisement
நவ திருப்பதிக்கு சிறப்பு பேருந்து: புரட்டாசி 4 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு நவ திருப்பதி கோயில்களுக்கு 4 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகளில் 157 போ் பயணித்தனா். இந்தப் பேருந்துகள்
நவதிருப்பதி கோயில்களான திருவைகுண்டம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா் திருநகரி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று இரவில் திரும்பின. இந்த சிறப்பு பேருந்துகளில் பயணித்தவா்களுக்கு இனிப்பு, காரம், தண்ணீா் பாட்டில்கள், கோயில்கள் குறித்த விளக்க கையேடுகளை வழங்கி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.