FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

புரட்டாசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

9 அக்டோபர் 2026, 12:13 am IST
~
பகிர்:

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

இதில் கொரட்டி காளத்தீசுவரா் கோயிலில் காளத்தீசுவரா், நந்தி பகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டன.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதேபோல் திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments