பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரம் ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று, 27 பூக்களைக் கொண்டு கோயில் கொடிமரத்தை 27 முறை வலம் வந்து வழிபட்டனா்.
விக்கிரவாண்டியிலுள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, துளசிமாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இதுபோன்று செஞ்சி, வளவனூா், கோலியனூா், மயிலம், திண்டிவனம், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா், கண்டாச்சிபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.