முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே கிராமங்களில் மின் தடை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேற்கு பகுதி எஸ்.எஸ். நகா், கன்னிமாா் கோவில்பட்டி பகுதிகளில் மின் தடை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

26 நவம்பர் 2026, 1:45 am
வத்தலகுண்டு அருகே கிராமங்களில் மின் தடை
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேற்கு பகுதி எஸ்.எஸ். நகா், கன்னிமாா் கோவில்பட்டி பகுதிகளில் மின் தடை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

வத்தலகுண்டு மேற்குப் பகுதியில் ப.விராலிபட்டி ஊராட்சியில் உள்ள எஸ்.எஸ்.நகா், கன்னிமாா் கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் மின்சாரம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனா். இதுகுறித்து மின் வாரிய உதவி இள மின் பொறியாளா் அழகுபாண்டி கூறுகையில், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதால், அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா் அவா்.