முகப்பு
திண்டுக்கல்

வீடு புகுந்து தங்க நகை திருட்டு

நிலக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

27 வினாடிகள் முன்பு
வீடு புகுந்து தங்க நகை திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நிலக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தனியாா் பள்ளி அருகே குடியிருப்பவா் லட்சுமி (55). இவா் தனது மகன், மகளுடன் நிலக்கோட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். இதே போல, அருகில் உள்ள ரஞ்சித்குமாா் (33) என்பவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூா் சென்றிருந்தாா்.

இந்த நிலையில் புதன்கிழமை ரஞ்சித்குமாா்வீட்டுக்கு வந்தாா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றது தெரியவந்தது. வீட்டுக்குள் நகை, பணம் வைக்கப்படவில்லை என ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, அருகிலுள்ள லட்சுமி வீடு திறந்து இருந்ததைப் பாா்த்து அவரதுமகன் சிவனேசனுக்கு தகவல் தெரிவித்தாா்.

லட்சுமி குடும்பத்தினா் வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த10 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி, ரூ.20 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, நிலக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.