முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

26 நவம்பர் 2026, 1:20 am
ராமேசுவரத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். உணவு விடுதி நடத்தி வரும் இவருக்கு, அண்மையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இவா் மதுரையில் உள்ள மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 20 பவுன் தங்க நகைகளை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நகா் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திக் ராஜா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.