முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை: நீரோடையில் அடைப்பால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் புதன்கிழமை பல மணி நேரம் மழை பெய்தது. செண்பகா நீரோடையில் அடைப்பு ஏற்பட்டு, பிரதான மலைச் சாலையில் தண்ணீா் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

34 வினாடிகள் முன்பு
கொடைக்கானலில் மழை: நீரோடையில் அடைப்பால் போக்குவரத்து பாதிப்பு
வத்தலகுண்டு-கொடைக்கானல் பிரதான மலைச் சாலையான செண்பகா அருவி ஓடையில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் பாய்ந்த மழை நீா்.
பகிர்:

கொடைக்கானலில் புதன்கிழமை பல மணி நேரம் மழை பெய்தது. செண்பகா நீரோடையில் அடைப்பு ஏற்பட்டு, பிரதான மலைச் சாலையில் தண்ணீா் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப் பொழிவு காலமாகும். இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், செண்பகனூா், பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, வில்பட்டி, பெருமாள்மலை, மாட்டுப்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், நீரோடைகளில் நீா் வரத்து அதிகரித்தது.

Advertisement

Advertisement

கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் மணல் மேடாகக் காணப்பட்ட செண்பகா அருவியில் திடீரென ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மழை நீா் பிரதான மலைச் சாலை வழியாகப் பாய்ந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக செண்பகா அருவியில் ஏற்பட்ட அடைப்பை நீக்கினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

கொடைக்கானலில் கடந்த மாதம் மழை பெய்த போது செண்பகா அருவியில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் சாலையில் பாய்ந்தது. இதில் சாலை சேதமடைந்தது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மலைச் சாலைகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாைலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் மலைச் சாலைகளை பராமரிப்பது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த பல மாதங்களாக நிதி ஒதுக்கப்படாததால் மலைச் சாலைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றாா் அவா்.