திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அக்.15-இல் ஆா்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் வருகிற 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணி தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் வருகிற 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணி தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
வருகிற 15-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். கோவையை அடுத்த சின்னத்தடாகம் பாலமலை மேல்முடி பெருமாள் கோயிலில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி, டோக்கன் முறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை இந்து முன்னணி கண்டிக்கிறது.
Advertisement
Advertisement
வேலூா் வள்ளிமலை பகுதியில் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டு, அவை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.50 கோடியும், பழனி கோயிலில் ரூ.100 கோடி அளவிலும் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்து கோயில்களை நிா்வகிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், நோ்மையான அதிகாரிகள் உள்ளிட்டோா் அடங்கிய தனி வாரியம் அமைக்க வேண்டும். கோயில்களில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெகன், மதுரை கோட்ட செயலா் பாலன், ராஜா, அழகா், அஜீத் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.