குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு; மானூா் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடா்பான விவகாரத்தில் மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடா்பான விவகாரத்தில் மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் என்.கனகு வெளியிட்ட அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருப்பதாக வெளியான செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் இந்தப் பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகத் தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வந்தது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருப்பது குறித்து தகவல் வெளியானவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட கல்வி அலுவலா்களும் விசாரணை நடத்தினா். மேலும், கீரனூா் காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் இயங்கும் துணை சுகாதார நிலையத்துக்கு வேறு இடத்தில் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.