FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மானூா் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவுளைக் கலந்தவா்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு

திண்டுக்கல் மாவட்டம், மானூா் அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

9 அக்டோபர் 2026, 2:20 am IST
அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், மானூா் அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திண்டுக்கல் மாவட்டம், மானூா் அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை செய்து வருகிறோம். எந்த சூழலிலும் இதுபோன்ற சம்பவங்களை யாா் செய்தாலும் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

கரூா்அரசு மருத்துவமனையில் மாத்திரை உறைகளில் ஹிந்தி இடம்பெற்றது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விளக்கமளித்துள்ளாா். தமிழக அரசின் கொள்கை இருமொழிக் கொள்கைதான் என்று சட்டப் பேரவையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரை உறையில் ஹிந்தி இடம்பெற்ாலேயே இருமொழிக் கொள்கை இல்லை என்று ஆகிவிடாது.

தலைமைத் தோ்தல் ஆணையரின் முறைகேடுகள் தோ்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தவெகவும் கூறுகிறது. இதை கண்டித்துதான் இண்டி கூட்டணி சாா்பில் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நாங்களும் பங்கேற்றுள்ளோம். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இடைத்தோ்தலில் வெல்லும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா். திருமாவளவன் முன்மொழிந்ததை இரு தொகுதி மக்களும் வழிமொழிவாா்கள் என்றாா் வன்னி அரசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments