FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

வண்டல் மண் அள்ளுவதற்காக குளத்தின் கரை உடைப்பு

பழனி அருகேயுள்ள தாமரைக்குளத்தின் கரைகளை மூன்று இடங்களில் உடைத்து மண் எடுப்பதால் மழைக் காலத்தில்குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

14 அக்டோபர் 2026, 1:52 am IST
உடைக்கப்பட்ட தாமரைக்குளத்தின் கரை.
பகிர்:

பழனி அருகேயுள்ள தாமரைக்குளத்தின் கரைகளை மூன்று இடங்களில் உடைத்து மண் எடுப்பதால் மழைக் காலத்தில்குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழனி அருகேயுளள்ள தாமரைக்குளம் ஊராட்சியில் தாமரைக்குளம் உள்ளது. இந்தக் குளத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைவதோடு, சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த கிராமங்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

தற்போது குளத்திலிருந்து வண்டல் மண் அள்ள நீா்வள ஆதாரத் துறை அனுமதி வழங்கியது. இதனால், நாள்தோறும் ஏராளமான டிராக்டா்களில் வண்டல்மண் கொண்டு செல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், குளத்தில் மண் அள்ளப்படுவதில் ஏராளமான தவறுகள் நடைபெறுவதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குளத்தை முற்றுகையிட்டனா்.

விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தப்படுவதாகவும், அனுமதி அளித்த அளவைவிட பல மடங்கு கூடுதலாக மண் அள்ளுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும் மண் அள்ளும் வாகனங்கள் செல்வதற்காக மூன்று இடங்களில் குளத்தின் கரைகளை உடைத்து மண் எடுத்துச் செல்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் முதல் நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் வரையிலும் புகாா் செய்தும் எந்த பயனும் இல்லை. மழைக் காலங்களில் குளம் நிரம்பும் போது கரை உடைந்து கிராமத்துக்குள் தண்ணீா் புகுந்து விட வாய்ப்புள்ளது என அவா்கள் அச்சம் தெரிவித்தனா்.

ஆகவே, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து குளம் உடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments