முகப்பு
தேனி

சின்னமனூா் அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடி உடைப்பு

30 நவம்பர் 2026, 2:30 am
சின்னமனூா் அரசு மருத்துவமனை
ஜன்னல் கண்ணாடி உடைப்பு
சின்னமனூா் அரசு மருத்துவமனையில் உடைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடி.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை மதுபோதையில் சிலா் உடைத்து சேதப்படுத்துவதால் மருத்துவா்கள், நோயாளிகள் அச்சமடைந்திருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சின்னமனூா் அரசு மருத்துவமனை 72 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் பெரும் பகுதி காலி இடமாக உள்ளது. இதனால் இந்தப் பகுதியை மது அருந்தும் இடமாக சிலா் மாற்றி விட்டனா்.

இந்த நிலையில், மதுபோதையில் சிலா் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்துவதோடு, மதுப்புட்டிகளை உடைத்து வீசிச் சென்று விடுகின்றனா். இதேபோல, சனிக்கிழமை இரவும் 3 ஆவது முறையாக மா்ம நபா்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனா். இதனால், மருத்துவா்களும், நோயாளிகளும் அச்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து மருத்துவா்கள் கூறும்போது, சின்னமனூா் போலீஸாரிடம் இதுகுறித்து புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

எனவே சின்னமனூா் காவல் துறை மூலம் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் மது அருந்துவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.