முகப்பு

கும்பகோணம் மகாமகம் விழாவுக்கான முன்னேற்பாடுகள்! அமைச்சர்கள் ஆய்வு

மகாமக குளத்தின் முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தது பற்றி..

25 நவம்பர் 2026, 12:52 pm
கும்பகோணம் மகாமகம் விழாவுக்கான முன்னேற்பாடுகள்! அமைச்சர்கள் ஆய்வு
மகாமக குளத்தை ஆய்வு செய்தபோது.. - video crop
பகிர்:

மகாமக குளத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் அருண்ராஜ், வினோத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மகாமகம் கும்பகோணத்தில் வருகிற 2028 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து துறை அலுவலர்களும் அவ்வப்போது மகாமகம் தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று கும்பகோணம் வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் மகாமக குளத்தின் கீழ்கரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

அங்கு மகாமக குளத்தின் புகைப்படங்கள் பொதுப்பணித்துறை மூலமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இதனைப் பார்வையிட்ட அமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் ரேவதி மற்றும் அதிகாரிகள் மகாமகம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தின்போது பக்தர்கள் வருகை குறித்தும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

பின்னர் மகாமக குளத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ் குளத்தின் புனித நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டார். மகாமக குளத்தின் புனித நீராடல் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி அமைச்சரிடம் விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.