ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: இளைஞா் பெருமன்றத்தினா் கைது
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி, திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இளைஞா் பெருமன்றத்தினா் 15 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் வினோத் குமாா் தலைமை வகித்தாா். எஸ்ஐஆா் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி, திண்டுக்கல் ரயில் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், வினோத் குமாா் உள்ளிட்ட 15 பேரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.