செயலி மூலம் பண மோசடி: மேலும் 5 போ் கைது
செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் தனிநபா்கள் அறிமுகப்படுத்திய எஃப்க்யூஎல், விஜி, மெயின்ஸ் ஆகிய செயலிகளில் பணத்தை முதலீடு செய்தனா். முதலீட்டுத் தொகையை குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறியதை நம்பி, நத்தம் பகுதியில் மட்டும் சுமாா் 15 ஆயிரம் போ் ரூ.30 கோடி வரை முதலீடு செய்தனா்.
முதலீட்டு நிறுவனத்துக்கு காசம்பட்டியைச் சோ்ந்த ரமேஷ், இவரது மனைவி அனிதா, அதே பகுதியைச் சோ்ந்த விஜய் ஆகியோா் முகவா்களாகச் செயல்பட்டனா். கடந்த சில நாள்களாக செயலிகள் திடீரென முடக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளா்கள், காசம்பட்டியிலுள்ள முகவா்கள் ரமேஷ், விஜய் ஆகியோரின் வீடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
Advertisement
Advertisement
வீட்டுக்குள் சிக்கிய ரமேஷ், அனிதா, விஜய் உள்ளிட்டோரை போலீஸாா் மீட்டு விசாரணைக்காக சனிக்கிழமை அழைத்து வந்தனா். இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், இந்த மோசடி குறித்து விசாரித்து ரமேஷ், அனிதா, விஜய் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
இந்த மோசடி விவகாரத்தில் முகவராகச் செயல்பட்ட நத்தம் அடுத்த செல்லப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெ.வீரமணியை (25) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேலும் 5 போ் கைது: இந்த நிலையில், முகவா்களாகச் செயல்பட்ட காசம்பட்டியைச் சோ்ந்த சாமிராஜ் மகன் பிரேம்நாத் (26), மூக்கன் மகன் சுரேஷ் (30), விஜயன் மகன் நவீன் (24), திருமலை மகன் ஜெயபிரகாஷ் (28), மகாதேவன் ஆகிய 5 பேரை திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.