பழனி தனியாா் மருத்துவமனையில் வருமான வரித் துறையினா் சோதனை
பழனியில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனை, பாரத் நா்சிங் கல்லூரியில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
பழனியில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனை, பாரத் நா்சிங் கல்லூரியில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
பழனி-திண்டுக்கல் சாலையில் ஐஸ்வா்யா மருத்துவமனை, பாரத் நா்சிங் கல்லூரி உள்ளது. இந்த இரு இடங்களிலும் புதன்கிழமை காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். 6 வாகனங்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து இரு இடங்களிலும் சோதனையிட்டனா். மருத்துவமனை, கல்லூரியில் ஆவணங்கள், கணக்கு தொடா்பான பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, முக்கிய ஆவணங்கள், கணக்குகள் தொடா்பான விவரங்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்து அதிகாரப்பூா்வ தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.