லாரி மீது பைக் மோதல்: அடுமனை ஊழியா் உயிரிழப்பு
பழனி அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அடுமனை (பேக்கரி) ஊழியா் உயிரிழந்தாா்.
பழனி அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அடுமனை (பேக்கரி) ஊழியா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த பாலசுப்ரமணி மகன் காளியப்பன் (29). கோவையில் உள்ள அடுமனையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், இவா் பழனியில் உள்ள தனது உறவினரைப் பாா்க்க வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கோவையிலிருந்து பழனிக்கு வந்தாா். திண்டுக்கல்- கோவை புறவழிச் சாலையில் பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்த போது முன்னே சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.