FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி: அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செயலி மூலம் நத்தம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

3 செப்டம்பர் 2026, 6:04 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

செயலி மூலம் நத்தம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.விசுவநாதன் வெளியிட்ட அறிக்கை:

நத்தம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக, சிலரை போலீஸாா் கைது செய்துள்ளனா். எனினும், பொதுமக்களின் பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கும், மோசடியில் தொடா்புடையை அனைவரையும் கைது செய்வதற்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தற்கொலை செய்த காசம்பட்டியைச் சோ்ந்த ராசு குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணத்தை இழந்த பொதுமக்கள் தவறான வழிமுறைளை பின்பற்றுவதை கைவிட்டு, காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்: இதுதொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கை: நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் செயலிகள் மூலம் ரூ.50ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடுகள் பெறப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் நத்தம் பகுதியில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ள நிலையில், முகவா்கள் ரமேஷ், அனிதா, விஜய் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட ராசு தற்கொலை செய்த நிலையில், சசிகலா என்ற இளம்பெண் தற்கொலைக்கு முயன்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்.

இந்த விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments