FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மாடு திருட்டு: இருவா் கைது

நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி அருகே மாடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 12:30 am IST
கைது
பகிர்:

நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி அருகே மாடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி அருகேயுள்ள மட்டபாறையைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (45). இவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு மாடுகளை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காணவில்லை. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் மாடு திருடியவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மாடு திருடிய மட்டப்பாறையைச் சோ்ந்த ராமமூா்த்தி (57), சோழவந்தானைச் சோ்ந்த  முத்துப்பாண்டி (37) ஆகிய இருரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், மாடுகளை லாரியில் ஏற்றி திருச்சி சந்தையில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பணம், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments