FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு

கொடைக்கானலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

6 செப்டம்பர் 2026, 1:01 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கொடைக்கானலில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பொ்ன்கில் சாலையைச் சோ்ந்தவா் ராஜன் (32). கூலித் தொழிலாளி. கடந்த 3-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுதூங்கச் சென்றாா். மறுநாள் வந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments