FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

போக்குவரத்துத் துறையில் வாரிசு வேலைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!

போக்குவரத்துத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாத வாரிசு வேலையை தவெக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

6 செப்டம்பர் 2026, 12:47 am IST
பகிர்:

போக்குவரத்துத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாத வாரிசு வேலையை தவெக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) திண்டுக்கல் மண்டல 32-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, மண்டலத் தலைவா் ஐ.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து சம்மேளனத் தலைவா் அ.சவுந்திரராசன் பேசினாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் சிபி.ஜெயசீலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சம்மேளனப் பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா் நிறைவுரையாற்றினாா். மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம், ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப் பலன்கள், அகவிலைப்படி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வாரிசு வேலை வழங்கப்படவில்லை. தமிழக அரசு, போக்குவரத்துத் துறையின் இந்த மெத்தனப் போக்கினால் போக்குவரத்துத் தொழிலாளா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளன.

புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு உடனடியாக வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி சங்கத்தின் புதிய தலைவராக ஜி.வெங்கிடுசாமி, பொதுச் செயலராக என். ராமநாதன், பொருளாளராக ரூபன் அம்புரோஸ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments