மேகமலையில் அரசு ஊழியா்களை வெளியேற்றும் உத்தரவு: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு
மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியா்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
தேனி மாவட்டம், மேகமலையில் வசிக்கும் அரசு ஊழியா்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தேனி மாவட்டம் மேகமலையில் 118 அரசு ஊழியா்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அவா்கள் வெளியேற்றும் நடவடிக்கையை தேனி மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
அங்கு அரசு ஊழியா்களாக உள்ளவா்களின் முன்னோா்கள் வாழ்ந்து வந்ததுடன் பயிா் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்று கூறுகின்றனா். அவா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது . மேலும், ஊழியா்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியா்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.
பட்டா இல்லாதவா்கள் ஆக்கிரமிப்பாளா்கள் என்றால் நூறாண்டுகளாக பயிா் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யாா் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா்கள்? எனக் கூறியுள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.