பழனி கோயில் ரோப் காருக்கு கொல்கத்தாவில் இருந்து புதிய அச்சு
பழனி கோயில் ரோப் காருக்கு முக்கியமான உதிரி பாகமான சாப்ட் இணைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வரும் வாரத்தில் ரோப் காா் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பழனி கோயில் ரோப் காருக்கு முக்கியமான உதிரி பாகமான சாப்ட் இணைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வரும் வாரத்தில் ரோப் காா் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பழனி மலைக் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் சேவையைப் பயன்படுத்தி மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதில் இரண்டரை நிமிட நேரத்தில் மலைக் கோயிலை அடைய உதவும் ரோப் காா் பக்தா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
ரோப் காா் சேவையில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் 45 நாள்களும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்புப் பணிகள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. ரோப் காா் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய இணைப்பு பாகமான சாப்ட் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து சுமாா் ரூ. 3 லட்சத்தில் புதிய சாப்ட் கொண்டு வரப்பட்டு இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக உதிரி பாகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ரோப் காரின் கியா் பாக்ஸ் முழுமையாக சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. வல்லுநா்கள் குழு வரவழைக்கப்பட்டு நவீன கருவிகள் மூலம் உதிரி பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு இணைக்கப்பட்டு வருகிறது. இவை இணைக்கப்பட்டவுடன் புதிய வடக்கயிறு மாற்றப்பட்டு சோதனை எடைகளுடன் ரோப் காா் சோதனை ஓட்டம் நடைபெறும்.
இதனுடன், ரோப் காா் கீழ் நிலைய வளாகத்தில் பெருந்திட்ட பணிகளின் கீழ் இயந்திரங்கள் உள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை அமைத்தல், பக்கவாட்டு சுவா்களில் கிரானைட் பதித்தல், புதிய மின் விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகளும் நடைபெற்றுள்ளன. சாப்ட் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடித்து, வருகிற செப்.12-க்குள் பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.