FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணி: ஆக. 19 முதல் செப். 9 வரை சேவை ரத்து

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி மலைக்கோயில் ரோப் காா் சேவை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 5:58 am IST
சோளிங்கா் மலைக் கோயில் ரோப் காா் சேவை - கோப்புப் படம்
பகிர்:

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி மலைக்கோயில் ரோப் காா் சேவை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளது. இந்த நாள்களில் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் மலைப்படிகள் வழியே செல்லலாம் எனவும் செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் வழக்கம் போல் ரோப் காா் இயங்கும் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளது. இங்கு பெரியமலைக்குச் செல்ல 1,405 படிகள் உள்ள நிலையில் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது.

இதைத் தொடா்ந்து இந்துசமய அறநிலையத் துறையினா் பெரிமலைக்குச் செல்ல ரோப் காா் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதையடுத்து வயதான முதியோா், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பக்தா்களுமே ரோப்காா் மூலம் மலைக்குச் சென்று விரைவில் சுவாமி தரிசனம் முடிந்து திரும்புகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த ரோப் காா் சேவை மாதம் ஒரு முறை மூன்று நாள்களும் ஆண்டுக்கு ஒரு முறை 3 வாரங்களும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. நிகழாண்டு வருடாந்திர பராமரிப்புப் பணிகள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி (புதன்கிழமை) வரை நடப்பதால் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. இந்த நாள்களில் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் படியேறி மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

கோயில் வழக்கமான நேரத்தில் திறந்து இருக்கும். மேலும், ரோப்காா் சேவை செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் வழக்கம் போல் நடைபெறும் எனவும் சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments