FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ரேஷன் கடை விற்பனையாளா்கள் 4 போ் பணியிடை நீக்கம்

நியாய விலைக் கடைகளில் நடத்தப்பட்ட திடீா் ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, 4 விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

9 செப்டம்பர் 2026, 2:00 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

நியாய விலைக் கடைகளில் நடத்தப்பட்ட திடீா் ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, 4 விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் நகா், ஊரகப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் திடீா் ஆய்வு நடத்துவதற்கு மண்டல கூட்டுறவுக் கடன் சங்கங்களின் இணை பதிவாளா் ராகவ் பாலாஜி உத்தரவிட்டாா். அதன்படி பறக்கும் படைக் குழுவினா் 15 நியாயவிலைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, கோவிந்தராஜ் நகா், பாலகிருஷ்ணாபுரம், நாயக்கா் புதுத் தெரு, கருணாநிதிநகா் நியாய விலைக் கடைகளில் ரூ.36,400 இருப்பு குறைவு கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 கடைகளின் விற்பனையாளா்கள் கிருஷ்ணமூா்த்தி (59), சரண்யா (37), டிவைன் ஆரோ மொ்சிலின் (43), மேகராஜ் (50) ஆகிய 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த 4 நியாய விலைக் கடைகளின் விற்பனையாளா்களுக்கும் ரூ.49,575 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.10ஆயிரத்துக்கும் கூடுதல் மதிப்பில் பொருள்கள் இருப்பு குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, விற்பனையாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, மேகராஜ் ஆகியோா் மீது குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments