FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை: புகாா் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்

கூட்டுறவுத் துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் குறித்து...

11 அக்டோபர் 2026, 10:40 pm IST
கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: கூட்டுறவுத் துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 9600561969 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தொடா்ந்து மற்ற மாவட்டங்கலிலும் கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனைக்கு உள்ளது.

இது குறித்து கூட்டுறவு துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக் காலமாக உயா்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

பொதுமக்களின் தொடா்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கையின் தொடா்ச்சியாக சனிக்கிழமை (அக்.10) முதல் சென்னையிலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.11) முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகா்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயா்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடா்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

அதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 9600561969 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Onions sold at Rs. 35 in cooperative ration shops

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments