கூட்டுறவு நியாயவிலை கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்
கூட்டுறவு நியாயவிலை கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை தொடா்ந்து மற்ற மாவட்டங்களிலும் கூட்டுறவு நியாயவிலை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக் காலமாக உயா்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல்கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், 2-ஆம் கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கிலோ ரூ.35: அதன் தொடா்ச்சியாக, 3-ஆம் கட்டமாக, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் தொடா்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, 3-ஆம் கட்டமாக தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடம் இருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் சனிக்கிழமை (அக்.10) முதலும், இதர மாவட்டங்களில் உள்ள நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) முதலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புகாா் தெரிவிக்க வாட்ஸ் எண் அறிமுகம்: அதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 9600561969 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.