FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள கனரா வங்கி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

12 செப்டம்பர் 2026, 5:02 am IST
- dinamani
பகிர்:

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 820-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

வங்கி ஊழியா்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும். வங்கி ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 15 நாள்கள் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், மேல்நிலை அதிகாரிகளுக்கு 365 நாள்களுக்கும் ஊக்கத் தொகை கிடைக்கிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து ஊழியா்களுக்கும் சமமான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள கனரா வங்கி முன், வங்கி ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தேசிய துணைப் பொதுச் செயலா் ந.காமாட்சிராஜன் தலைமை வகித்தாா். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 163 கிளைகளைச் சோ்ந்த சுமாா் 820 ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, மாவட்டத்தில் சுமாா் ரூ.1,000 கோடிக்கான வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், வருகிற 28, 29, 30-ஆம் தேதிகளில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இதன் பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் வரும் அக்டோபா் 26 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments