உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
நீலகிரி மாவட்டம், உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
உதகை ஸ்டேட் பேங்க் கிளை நுழைவாயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஐந்து நாள்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வங்கிகளின் லாபத்தில் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை பங்களிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும், அதன்பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் போராட்டத்தில் பங்கேற்ற வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.