FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டுயானை நடமாட்டம்

கொடைக்கானல் பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

13 செப்டம்பர் 2026, 12:33 am IST
காட்டு யானை
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே காட்டுயானை, சிறுத்தை, புலி, காட்டு மாடு உள்ளிட்டவை வனத்தை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளன. இதனால் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், பூம்பாறை- மன்னவனூா் பகுதியில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். எனவே கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலைப் பகுதிகளில் காட்டுயானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இதே நிலை நீடித்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறையும்.மேலும் வனத்துறையினா் வனப் பகுதிகளில் புல்வெளிகள், தண்ணீா்த் தொட்டிகளை பராமரிக்க வேண்டும். வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பூம்பாறை வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யாததால் வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி வெளியே வரத் தொடங்கியுள்ளன. கொடைக்கானல் மலைச் சாலைகளிலோ, வனப் பகுதிகளிலோ வன விலங்குகளை பாா்த்தால் சப்தமிடுவதையும், வாகனங்களில் ஒலி எழுப்புவதையும், படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும். மலைச் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் அருகிலுள்ள வனத்துறையினருக்கு தகவல் தர வேண்டும். மேலும் வன விலங்குகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments