FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

ரேஷன் கடையில் புகுந்த காட்டுயானை

காட்டுயானை - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பில் உள்ள நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை நுழைந்து பருப்பு மூட்டையை எடுத்து காட்டு யானை உண்டது.

சிற்றாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையின் கதவை உடைத்து சனிக்கிழமை இரவு காட்டு யானை நுழைந்ததாம். அங்கிருந்து 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பருப்பை வெளியே இழுத்து வந்து , உண்டுவிட்டு காலி மூட்டையை அப்பகுதியில் வீசிச்சென்றுள்ளதாம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நியாயவிலைக் கடை பகுதிக்குச் சென்ற தொழிலாளா்கள், கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு, பருப்புகள் சிதறிக்கிடப்பதை பாா்த்து தெரிவித்த தகவலையடுத்து வனத்துறையினரும், நியாயவிலைக் கடை ஊழியா்களும் அங்கு வந்து பாா்வையிட்டனா். இந்த சம்பவங்களால் ரப்பா் கழக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments