FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

நியாயவிலை கடையில் அரிசி மாமூல் கேட்டு மிரட்டியவா் கைது

சேலம் மாவட்டம், மேட்டூரில் நியாயவிலைக் கடையில் 100 கிலோ அரிசியை மாமூல் கேட்டு விற்பனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

3 October 2026, 1:23 am IST
கைது
பகிர்:

சேலம் மாவட்டம், மேட்டூரில் நியாயவிலைக் கடையில் 100 கிலோ அரிசியை மாமூல் கேட்டு விற்பனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் பொன் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிபவா் வாசுகி (56). இவரிடம் குள்ளவீரன்பட்டியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (36) என்பவா், தினமும் தனக்கு 100 கிலோ அரிசி மாமூலாக தரவேண்டும் என்று அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி வாசுகி மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சிவப்பிரகாஷ் மீது மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை வியாழக்கிழமை கைதுசெய்தனா். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது மேட்டூா், சேலம் பள்ளப்பட்டி, சங்ககிரி, ஊத்துக்குளி, வெப்படை உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments