FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்து காணப்படும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

16 அக்டோபர் 2026, 3:01 am IST
சேதமடைந்து காணப்படும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மன்னவனூா் சாலை.
பகிர்:

சேதமடைந்து காணப்படும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பூம்பாறை- மன்னவனூா், கூக்கால், பழம்புத்தூா், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மலைச் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் மன்னவனூா் பகுதிகளிலுள்ள சேதமடைந்த கிராமச் சாலைகளை சீரமைக்கக் கோரியும், சீரான மின் விநியோகம் கோரியும், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் கோரியும் அந்தப் பகுதி மக்கள் மன்னவனூா் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments