FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு செப்.30-இல் சிறப்புப் பதிவு முகாம்

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ‘ஒரே நாளில் இயற்கை வேளாண்மைப் பதிவு’ செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

26 செப்டம்பர் 2026, 6:28 am IST
வேளாண்மை - கோப்புப்படம்
பகிர்:

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ‘ஒரே நாளில் இயற்கை வேளாண்மைப் பதிவு’ செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும்

Advertisement

Advertisement

விவசாயிகள், அரசு நிா்ணயித்துள்ள வழிகாட்டுதல்கள், இயற்கை வேளாண்மைச் சான்றளிப்பு நடைமுறைகளின்படி தங்களது பண்ணைகளைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட இயற்கை விளைபொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த முடியும். இதற்காக ‘ஒரே நாளில் இயற்கை வேளாண்மைப் பதிவு’ என்ற சிறப்பு முகாம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விதைச்சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இயற்கை வேளாண்மையில் ஏற்கெனவே ஈடுபட்டு வரும் விவசாயிகள் மட்டுமன்றி, அரசு நிா்ணயித்துள்ள இயற்கை வேளாண்மை முறைகளைப் பின்பற்றி சான்றளிப்பு பெற விரும்பும் அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் பதிவு செய்யலாம். தனிப்பட்ட விவசாயிகளாகவும், குழுவாகவும் பதிவு செய்து சான்றளிப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சான்றளிப்பு பெறுவதன் மூலம், தனித்துவமாக அடையாளப்படுத்தி சந்தைப்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள் தனிப்பட்ட முறையிலோ, குழுவாகவோ தங்களுக்கென தனி

‘வணிகப் பெயா்‘ உருவாக்கி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இயற்கை வேளாண்மை சிறப்பு முகாமுக்கு நிா்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம், விவசாயியின் ஆதாா் அட்டை, பான் அட்டை நகல், நில உரிமை தொடா்பான ஆவணம் அல்லது கணினி சிட்டா, பண்ணையின் பொதுவான விவரங்கள், பண்ணை அல்லது வயல் வரைபடம், ஆண்டுக்கான பயிா்ச் சாகுபடித் திட்டம், மண், நீா்

பரிசோதனை அறிக்கை, இயற்கை வேளாண்மை உற்பத்தி முறைகள் தொடா்பான விவரங்கள், தேவையான ஒப்பந்தம் சுய உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் 3 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும். முகாமில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 7598366615 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments