பாரதி நினைவு தினக் கூட்டம்
தியாக தீபம் பேரவை சார்பில் பாரதியாரின் 94 ஆவது நினைவு தினக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தியாக தீபம் பேரவை சார்பில் பாரதியாரின் 94 ஆவது நினைவு தினக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரவை அமைப்பாளர் அ.பாலு தலைமை வகித்தார். யோகம் மாரிமுத்து முன்னிலை வகித்தார். கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம், தூய வரலாறு எனும் தலைப்பில் பேசினார். பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு எழுத்தாளர் லேனா.தமிழ்வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, சேதுபதி பள்ளி தாளாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.