பேருந்து மோதி இளைஞர் சாவு
தே.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
தே.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த நல்லசிவம் மகன் அப்பர்சுந்தரேசன் (30). இவர் திங்கள்கிழமை இரவு ராஜபாளையம்-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். மதுரை நோக்கி அவர் சென்றுகொண்டிருந்தார். தே.கல்லுப்பட்டி சமீபம் அம்மாபட்டி எஸ் வளைவு அருகே சென்ற போது மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அப்பர்சுந்தரேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தே.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநர் சிவகாசி ஆணைக்குட்டத்தைச் சேர்ந்த கணேசனைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.