FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட சிறப்புக் குழுக்கள்

2016ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க, அந்தந்த மாவட்டங்களில் இரு சிறப்புக் குழுக்கள் வரும் 15ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என, கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

2016ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க, அந்தந்த மாவட்டங்களில் இரு சிறப்புக் குழுக்கள் வரும் 15ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என, கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

  இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாநில கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 2016ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, மாவட்ட அளவில் இரு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்திட, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரைத் தலைவராகக் கொண்டும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், முதுநிலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும் குழு அமைக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்திட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் தலைவராகவும், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதுநிலைத் தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழுவை அமைக்கவேண்டும்.

  சிறப்புக் குழுவினர், மாநில விருதுபெற்ற நல்லாசிரியர்கள் பட்டியலை வைத்து, அவர்களது பணி, சமூக சேவை, கல்வி கற்பித்தலில் தனிச்சிறப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பெயர்களைத் தேர்வுசெய்து, வரும் 15ஆம் தேதிக்குள் பரிந்துரைக் கடிதத்துடன் மாநிலக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாநிலக் கல்வி இயக்குநரகத்திடமிருந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நல்லாசிரியர் விருதுக்கானவர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நடப்பாண்டிலிருந்து மாநில அரசின் விருது பெற்றவர்களின் பெயர்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும், தொடக்க, நடுநிலைப் பள்ளி பிரிவில் 2 பேர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் 2 பேர் என மாவட்டத்துக்கு 4 ஆசிரியர்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் என்றும், கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments